கார் மோதி சிறுவன் சாவு அணு விஞ்ஞானி மனைவி கைது
தாராப்பூரில், கார் மோதி சிறுவன் உயிரிழந்தான். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த அணு விஞ்ஞானியின் மனைவி கைது செய்யப்பட்டார்.
வசாய்,
பால்கர் மாவட்டம் தாராப்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஹிமான்சு போயர் (வயது9). இவன் அங்குள்ள அடாமிக் எனர்ஜி சென்டிரல் பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தான். நேற்றுமுன்தினம் சிறுவன் கிரிக்கெட் விளையாடுவதற்காக அங்குள்ள மைதானத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தான்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று சிறுவனின் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில், சிறுவன் ஹிமான்சு போயர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனான்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டிவந்த பெண்ணை பிடித்து தாராப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரித்தனர். இதில் அவரது பெயர் சுப்ரா மிஸ்ரா (வயது35) என்பது தெரியவந்தது.
அவரது கணவர் தாராப்பூர் அணுமின் நிலையத்தில் அணு விஞ்ஞானியாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சுப்ரா மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story