பள்ளிப்பட்டில் பலத்த மழை


பள்ளிப்பட்டில் பலத்த மழை
x
தினத்தந்தி 9 Feb 2018 3:00 AM IST (Updated: 8 Feb 2018 10:58 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று பலத்த மழை பெய்தது.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில் பள்ளிப்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் திடீரென்று பலத்த மழை பெய்தது.

இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மின்சாரம் தடைபட்டது.

தங்கள் நிலத்தில் புதிதாக செங்கல் சூளை அமைத்தவர்கள் நஷ்டத்திற்கு ஆளானார்கள்.

பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டை பகுதியிலும் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது.


Next Story