கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்
சின்னவீராம்பட்டினம் கடற்கரையில் இறந்த நிலையில் டால்பின், ஆமை கரை ஒதுங்கியது.
அரியாங்குப்பம்,
புதுவை மாநிலத்தின் கடற்பரப்பு கனகசெட்டிக்குளத்தில் இருந்து புதுக்குப்பம் வரை மொத்தம் 18 மீனவர் கிராமங்கள் உள்ளன. இந்த கடற்கரை பகுதியில் அரியவகை ஆமைகள், டால்பின் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்குவது வாடிக்கையாக உள்ளது.
இந்தநிலையில் அரியாங்குப்பம் அடுத்துள்ள சின்ன வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் சுமார் 6 அடி நீளமுள்ள டால்பின் மற்றும் ஆமை நேற்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதை பார்த்த மீனவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன், பாலசுப்ரமணி ஆகியோர் விரைந்து வந்து கரை ஒதுங்கிய டால்பின், ஆமையை மீட்டு, கடற்கரை பகுதியில் பள்ளம் தோண்டி புதைத்தனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், நவம்பர் மாதம் இறுதியில் இருந்து ஆமைகள் முட்டையிடுவதற்காக கடற்கரைக்கு அதிகாலையில் வந்து செல்வது வழக்கம். இந்த ஆமைகள் ஆழ்கடலில் இருந்து கரைக்கு வரும்போது பெரிய படகுகளின் என்ஜினில் அடிப்பட்டு இறக்கின்றது. கடந்த சில மாதங்களில் புதுவை கடற்கரை பகுதியில் சுமார் 130 ஆமைகள் மற்றும் 2 டால்பின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது என்றனர்.

Related Tags :
Next Story