கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் 2–வது நாளாக போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் 2–வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2018 4:30 AM IST (Updated: 9 Feb 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் 2–வது நாளாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலானோர் பணிக்கு வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடின.

திண்டுக்கல்,


வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், 21 மாத நிலுவை தொகை மற்றும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். தாசில்தார்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1000 திரும்ப வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். வருவாய்த்துறையில் கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்றும் அவர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை வருவாய்த்துறையில் 496 பேர் பணிபுரிகின்றனர். இதில் 330 பேர் 2 நாட்களுக்கு தற்செயல் விடுப்பு கோரி விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அவர்கள் அனைவரும் கடந்த 2 நாட்களாக பணிக்கு வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த போராட்டத்தால் வருவாய்த்துறை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.


Next Story