தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய அருந்ததியினருக்கான சிறப்பு முகாம்
தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ந.சேதுராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியம் உள்பட 15 நல வாரியங்களை சேர்ந்தவர்கள், சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். அப்படி அடையாள அட்டை வைத்திருக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை, கண் கண்ணாடி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், விபத்தில் மரணம் மற்றும் ஊனம் ஏற்படுதல், இயற்கை மரணம், ஈமச்சடங்கு ஆகியவற்றிற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் சென்னை தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் சார்பில் இதுவரை தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யாத அருந்ததியினரை புதிதாக பதிவு செய்தல் மற்றும் வாரிய அட்டையை புதுப்பித்தலுக்கான முகாம் வருகிற 11-ந்தேதி சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவில் உள்ள பெருநகர சென்னை தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 18 வயது முதல் 59 வயதுக்குட்பட்ட அருந்ததியினர் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், 2 பாஸ்போர்ட் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்து பதிவு செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story