இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்கள் 113 பேர் விடுதலை, சிறிசேனா அரசு நடவடிக்கை
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்கள் 113 பேர் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
ராமேசுவரம்,
தமிழ்நாட்டில் ராமேசுவரம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்கிற மீனவர்கள், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது. அவர்கள் அங்கு உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அவர்களது படகுகளையும் பறித்துக்கொள்கிறது.
இப்படி மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கிறபோதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக அரசு கடிதம் எழுதி அவர்களை விடுவிக்க ஏற்பாடு செய்வது வழக்கமான நடவடிக்கையாக அமைந்து உள்ளது.
இந்த நிலையில், அங்கு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்கள் 113 பேரை விடுதலை செய்வதற்கு அதிபர் சிறிசேனா அரசு பரிந்துரை செய்து உள்ளது. இவர்கள் கடந்த மாதம் வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.
இது தொடர்பாக தமிழ்நாடு எந்திர படகு மீனவர்கள் சங்கத்தின் தலைவர் பி.சேசுராஜா கூறியதாவது:-
தமிழக மீனவர்கள் 113 பேரை விடுதலை செய்வதற்கு இலங்கை அரசு சிபாரிசு செய்து உள்ளது. அவர்களில், ஒரு மீனவரின் மகன் இறந்து விட்டதால் அவரையும், அவரது உறவினர்கள் 3 பேரையும் அவசரமாக விடுதலை செய்ய கோரப்பட்டது. அவர்களை யாழ்ப்பாணம் கோர்ட்டு இன்று (நேற்று) விடுதலை செய்து விட்டது.
எஞ்சிய 109 மீனவர்கள் கோர்ட்டு நடவடிக்கைக்கு பின்னர் அடுத்த சில நாட்களில் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெயசீலன் என்ற மீனவரின் மகன் இறந்து விட்டதால் அவரையும், அவரது உறவினர்கள் 3 பேரையும் உடனே விடுதலை செய்யுமாறு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வேண்டிக்கொண்டதன் பேரில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 89 மீனவர்களை இலங்கை மொத்தமாக விடுதலை செய்தது நினைவுகூரத்தக்கது. அதன்பின்னர் இப்போதுதான் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், நல்லெண்ண நடவடிக்கையாக தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சமீப காலத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கையில் தொடர்ந்து சிறையில் இருப்பார்கள் என தெரிகிறது.

Related Tags :
Next Story