ஆறுமுகநேரியில் கோசல்ராம் பிறந்த நாள் விழா: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார்


ஆறுமுகநேரியில் கோசல்ராம் பிறந்த நாள் விழா: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 11 Feb 2018 2:00 AM IST (Updated: 10 Feb 2018 9:26 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் நடக்க உள்ள கோசல்ராம் பிறந்த நாள் விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார்.

தூத்துக்குடி,

ஆறுமுகநேரியில் நடக்க உள்ள கோசல்ராம் பிறந்த நாள் விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார்.

இதுகுறித்து த.மா.கா. தெற்கு மாவட்ட தலைவர் விஜயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

ஜி.கே.வாசன்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தியாகி கே.டி. கோசல்ராம் பிறந்த நாள் விழா வருகிற 14–ந்தேதி மாலை 5 மணிக்கு ஆறுமுகநேரியில் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நான் (விஜயசீலன்) தலைமை தாங்குகிறேன். திருச்செந்தூர் வட்டார தலைவர் சுந்தர்லிங்கம் முன்னிலை வகிக்கிறார். ஆழ்வார்திருநகரி கிழக்கு வட்டார தலைவர் முருகேசன் வரவேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். தொடர்ந்து சிறப்புரையாற்றுகிறார்.

யார்–யார்?

இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜ், மாநில மாணவர் அணி தலைவர் சுனில்ராஜ், மாநில பொது செயலாளர் ராம்பாபு, மூத்த துணை தலைவர் குமரதாஸ், மாநில செயலாளர்கள் சிந்தசுப்பிரமணியன், சார்லஸ், சிலுவை, சரவணன், மாநில இணை செயலாளர் ராஜமகாலிங்கம், மாவட்ட தலைவர்கள் ஜோதி (நெல்லை கிழக்கு), அய்யாதுரை (மேற்கு), கதிர்வேல் (தூத்துக்குடி வடக்கு) மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.


Next Story