தூத்துக்குடியில் அ.தி.மு.க. மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு
தூத்துக்குடியில் நடந்த அ.தி.மு.க. மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் நடந்த அ.தி.மு.க. மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் அ.தி.மு.க. மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மாவட்ட துணை செயலாளர் மோகன், மாவட்ட பொருளாளர் ஜெபமாலை ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர், புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்று பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டது. இதில் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் அய்யாத்துரை பாண்டியன், மாரியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா, இலக்கிய அணி செயலாளர் நடராஜன், பகுதி செயலாளர்கள் முருகன், ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.