ஞாறான்விளையில் பா.ஜனதா கட்சியினர் போராட்டம்
சாலையை சீரமைக்க வலியுறுத்தி பா.ஜனதா கட்சி சார்பில் ஞாறான்விளையில் மறியல் போராட்டம் நடந்தது.
குழித்துறை,
சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது. சிவாலய ஓட்டம் நடைபெறும் மார்த்தாண்டம் அருகே உள்ள ஞாறான்விளையில் இருந்து திக்குறிச்சி செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. எனவே அந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி பா.ஜனதா கட்சி சார்பில் ஞாறான்விளையில் மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு பாகோடு பா.ஜனதா மண்டல தலைவர் பாபு தலைமை தாங்கினார். மேல்புறம் ஒன்றிய தலைவர் சதீஷ் சந்திரன், செயலாளர் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் முருகன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குழிச்சல் செல்லன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உடனே மார்த்தாண்டம் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் பேசி, அவர்களை வரவழைத்தனர். அவர்கள் வந்து சாலையில் உள்ள குழிகளில் தற்காலிகமாக மண் போட்டு நிரப்புவதாக கூறி, உடனே பணியை தொடங்கினார்கள். அதைத்தொடர்ந்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

Related Tags :
Next Story