போலீசார் விரட்டியதால் தப்பி ஓடிய மீனவர், கடலில் விழுந்து சாவு
காசிமேடு மீன்பிடி துறைமுக கடலோரத்தில் விசைப்படகில் சூதாட்டத்தில் ஈடுபட்டபோது போலீசார் விரட்டியதால் தப்பி ஓடிய மீனவர், கடலில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
சென்னை,
அவரது உடலை எடுக்கவிடாமல் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை காசிமேடு சி.ஜி.காலனி 8-வது தெருவைச்சேர்ந்தவர் தமிழரசு (வயது 35). மீனவரான இவர், சொந்தமாக விசைப்படகு வைத்துள்ளார். இவருடைய மனைவி தீபிகா. இவர்களுக்கு தக்ஷன், அனிஷ் என 2 மகன்கள் உள்ளனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுக கடலோர பகுதியில் விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். மீன்பிடிக்கச்செல்லாத நாட்களில் மீனவர்கள் இந்த விசைப்படகுக்குள் அமர்ந்து சீட்டு வைத்து சூதாடுவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு மீனவர் தமிழரசு, காசிமேடு பழைய வார்ப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகில் அமர்ந்து நண்பர்களுடன் சூதாடிக்கொண்டிருந்தார். அப்போது காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
போலீசாரை கண்டதும் படகில் சூதாடிக்கொண்டிருந்த தமிழரசும், அவருடைய நண்பர்களும் ஓடத்தொடங்கினர். அவர்களை போலீசார் துரத்தினார்கள். தமிழரசு, கடலோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகள் மீது ஏறி ஓடிக்கொண்டிருந்தார்.
அவரை பின்தொடர்ந்து துரத்திச் சென்ற போலீசார், லத்தியை அவர் மீது வீசி எறிந்தனர். போலீசார் வருகிறார்களா? என திரும்பி பார்த்தபடியே தமிழரசு ஓடியதால், போலீசார் வீசிய லத்தி அவரது கண்ணை தாக்கியது. இதில் நிலைகுலைந்த தமிழரசு, கடலில் தவறி விழுந்து விட்டார்.
அதன்பிறகு அவரை காணவில்லை. கடலில் விழுந்து மாயமான தமிழரசுவை சக மீனவர்கள் தேடினார்கள். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதையடுத்து தீயணைப்புபடையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், மீனவர்களின் உதவியுடன் கடலில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் இரவு வெகுநேரமாகியும் தமிழரசுவை மீட்க முடியவில்லை. இதனால் விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
நேற்று காலை 7 மணியளவில் தமிழரசு பிணமாக மீட்கப்பட்டார். கடலில் தவறி விழுந்த அவர், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டது தெரியவந்தது. அவரது உடலை கரைக்கு கொண்டு வந்தனர்.
தமிழரசு இறந்த தகவல் அறிந்ததும் அவருடைய குடும்பத்தினரும், உறவினர்களும் அங்கு திரண்டனர். அவரது உடலை எடுத்துச்செல்ல விடாமல் போலீசாரை தடுத்து முற்றுகைபோராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
சம்பவ இடத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மீனவர் தமிழரசுவின் உறவினர்களிடம் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சேஷன்சாய் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
தமிழரசுவின் மனைவி தீபிகாவுக்கு அரசு வேலைக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும், அவருடைய மகன்களின் கல்விச்செலவுக்கு உதவுவதாகவும் சமரசம் செய்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
பின்னர் தமிழரசுவின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியான மீனவர் தமிழரசுவுக்கு நேற்று திருமணநாள் ஆகும். திருமண நாளில் அவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Related Tags :
Next Story