‘வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுக்க வேண்டும்’ மந்திரி கருத்தால் சர்ச்சை
வாக்காளர்களுடன் தொடர்பை அதிகப்படுத்த அவர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுக்க வேண்டும் என்று பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில், மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
மும்பை,
சாங்கிலி மீரஜ் குப்வாட் மாநகராட்சி தேர்தல் இன்னும் 4 மாத காலத்தில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் சாங்கிலியில் பாரதீய ஜனதா தொண்டர்கள் மத்தியில், வருவாய்த்துறை மந்திரியும், அக்கட்சியின் மூத்த தலைவருமான சந்திரகாந்த் பாட்டீல் பேசினார்.
அவர் கூறும்போது, ‘‘அடுத்த 15 நாட்களில், குறைந்தது 200 பேரின் வீடுகளுக்காவது கட்சி தொண்டர்கள் சென்று, வாக்காளர்களுடன் தொடர்பை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும். வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை அளித்து, தொடர்பை அதிகப்படுத்திக் கொள்ளலாம்’’ என்றார்.
முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மந்திரிசபையில், 2–வது இடத்தில் அங்கம் வகிக்கும் மந்திரி சந்திரகாந்த் பாட்டீல், வாக்காளர்களை கவரும் வகையில் பரிசு பொருட்களை கொடுக்குமாறு தொண்டர்களை அறிவுறுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவருக்கு கண்டனம் தெரிவித்த மராட்டிய மேல்–சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே, ‘‘பா.ஜனதா– சிவசேனா அரசு ஊழல் நிறைந்தது. பா.ஜனதா கடந்த 3 ஆண்டுகளாக தேர்தல்களில் வெற்றி பெற தீய வழியில் சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி இருக்கிறது. அரசின் ஊழலை சந்திரகாந்த் பாட்டீலின் கருத்து ஒப்புக்கொள்கிறது’’ என்றார்.
மேலும், பா.ஜனதா பெற்ற நிதி விவரங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மந்திரி சந்திரகாந்த் பாட்டீலின் கருத்து ஜனநாயக கேலிக்கூத்து என்றும், பா.ஜனதாவின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவதாகவும் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சச்சின் சாவந்த் குறிப்பிட்டார்.

Related Tags :
Next Story