மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 11 Feb 2018 3:15 AM IST (Updated: 11 Feb 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சாரரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மத்திய ரெயில்வே வழித்தடமான கல்யாண் – திவா இடையே விரைவு வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10.54 மணி முதல் மாலை 4.19 மணி வரை விரைவு ரெயில்கள் அனைத்தும் கல்யாணில் இருந்து தானே வரை ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும்.

கல்யாண் – தானே இடையே உள்ள  விரைவு ரெயில்கள் அனைத்து ரெயில்நிலையங்களிலும் நிறுத்தப்படும். தானேக்கு பிறகு இந்த ரெயில்கள் மீண்டும் விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும். அப்போது முல்லுண்டு, பாண்டுப், விக்ரோலி, காட்கோபர், குர்லா, தாதர், பைகுல்லா ரெயில்நிலையங்களில் நின்று சி.எஸ்.எம்.டி. சென்றடையும்.

துறைமுக வழித்தடத்தில் பன்வெல் – நெருல் இடையே காலை 11.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 11.06 மணி முதல் மாலை 4.30 மணி வரை பன்வெல், பேலாப்பூரில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும், காலை 10.03 மணி முதல் பிற்பகல் 3.39 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பன்வெல், பேலாப்பூருக்கும் ரெயில் சேவை இருக்காது.

இதேபோல காலை 11.02 மணி முதல் மாலை 4.26 மணி வரை பன்வெலில் இருந்து தானேக்கும், காலை 11.14 மணி முதல் மாலை 4 மணி வரை தானேயில் இருந்து பன்வெலுக்கும் ரெயில்கள் இயக்கப்படாது. இதேபோல இன்று பன்வெல் – அந்தேரி இடையேயும் ரெயில்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேற்கு ரெயில்வேயில் சர்ச்கேட் – மும்பை சென்டிரல் இடையே ஸ்லோ வழித்தடத்தில் இன்று காலை 10.35 மணி முதல் பிற்பகல் 3.35 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் சர்ச்கேட் – மும்பை சென்டிரல் இடையே இருவழித்தடங்களிலும் ஸ்லோ ரெயில்கள், விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும்.

இந்த தகவலை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. 

Next Story