அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான ஆக்கி- கைப்பந்து போட்டி


அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான ஆக்கி- கைப்பந்து போட்டி
x
தினத்தந்தி 11 Feb 2018 4:15 AM IST (Updated: 11 Feb 2018 2:54 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் மாவட்ட அளவிலான ஆக்கி மற்றும் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன.

திருச்சி,

திருச்சி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நேற்று திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் மாவட்டத்தில் இருந்து 10 அணிகள் பங்கேற்றன. போட்டியை திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் புண்ணியமூர்த்தி, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட ஆக்கி சங்கத்தின் துணை தலைவர் ரவிதன்ராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இறுதி போட்டி யில் மணப்பாறை ஆக்கி அகாடமி அணி வெற்றி பெற்றது.அந்த அணிக்கு மாலையில் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணி மண்டல அளவில் நடைபெறும் ஆக்கி போட்டியில் விளையாடவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆக்கி சங்கத்தின் செயலாளர் ராஜராஜன், பொருளாளர் பாரூக் ஆகியோர் செய்திருந்தனர்.

இதேபோல் திருச்சி மாவட்ட கைப்பந்து (வாலிபால்) சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ஆண்கள்- பெண்களுக்கான கைப்பந்து போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் பிரிவில் 24 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்று விளையாடின.

போட்டியை கைப்பந்து சங்கத்தின் தலைவர் தமிழ்செல்வன், பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இறுதிப்போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. மாலையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் கே.என்.நேரு எம்.எல்.ஏ., அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்குகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கைப்பந்து சங்கத்தின் தலைவர் பிச்சையப்பா, செயலாளர் கோவிந்தராஜன் ஆகியோர் செய்துள்ளனர். 

Next Story