நில அபகரிப்பு தொடர்பாக உரிய ஆவணங்களுடன் புகார் கொடுத்தால் உடனடி நடவடிக்கை
நில அபகரிப்பு தொடர்பாக உரிய ஆவணங்களுடன் புகார் கொடுத்தால் உடனடி நடவடிக்கை துணை போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
வேலூர்,
வேலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக ரவி பதவியேற்றுக்கொண்டார். இவர் இதற்குமுன்பு திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அவருக்கு போலீசார் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் கடந்த சில மாதங்களாக துணை போலீஸ் சூப்பிரண்டு பணியிடம் காலியாக இருந்தது. இதனால் பல்வேறு மனுக்கள் விசாரிக்கப்படாமல் உள்ளது. அந்த மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவற்றின் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நில அபகரிப்பு தொடர்பாக மாவட்டத்தில் இருந்து பொதுமக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் உரிய ஆவணங்களுடன் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story