ஓ.பன்னீர் செல்வத்தின் தர்மயுத்தம் ‘டுபாக்கூர்’ டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி
முதல்-அமைச்சர் பதவி இல்லை என்பதற்காக உருவான யுத்தம். ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் ‘டுபாக்கூர்’ என்று தஞ்சையில், டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
தஞ்சாவூர்,
டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. மக்கள் சந்திப்பு இரண்டாம் கட்ட பயணத்தை நேற்று தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் இருந்து தொடங்கினார். முன்னதாக மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த டி.டி.வி. தினகரனுக்கு மேள, தாளத்துடன் பூரணகும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அவர், கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தார். ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இருந்ததுபோல் இல்லாமல், தஞ்சை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதில் தவறான நடைமுறை பின்பற்றப்பட்டு உள்ளது. நிச்சயம் இதற்கு அரசியல்வாதிகளின் நிர்ப்பந்தம் தான் காரணம்.
இதற்காக இந்த மாவட்ட கலெக்டர், நாளைக்கு எங்கு இருந்தாலும் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார். தவறுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளும் நீதிமன்ற நடவடிக்கைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சட்டசபையில் நான் பேசியபோது, டெல்டா மாவட்டத்தில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகுகின்றன. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அப்போது அரசு உச்சநீதிமன்றம் சென்று இருந்தால் இதற்கு உரிய நீதி கிடைத்து இருக்கும். ஆனால் அவர்கள் செய்யவில்லை.
தமிழகத்தில் மத்திய பாரதீய ஜனதா அரசின் கிளை நிறுவன ஆட்சிதான் நடக்கிறது. தமிழக ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. அவர்களுக்கு பதவியில் நீடித்தால் மட்டும் போதும். ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா அறிவித்த, நிதி ஒதுக்கிய திட்டங்களை நிறுத்தி உள்ளனர். எனது கட்சிக்காரர்கள் மீது பொய்வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஆட்சியாளர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு பதவியில் இருக்கிற வரையில் வருமானத்தை பெருக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.
ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் என்பது ‘டுபாக்கூர்’. தனக்கு முதல்-அமைச்சர் பதவி இல்லை என்பதற்காக உருவானதுதான் இந்த யுத்தம். அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் தான் இன்று பல்வேறு பதவிகளில் உள்ளனர். பா.ஜ.க. ஆதரவு இருக்கிறது என்பதால் இந்த ஆட்சி நடக்கிறது. ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து வருத்தம் தெரிவித்துள்ளார். திரும்பவும் அதை பெரிதுபடுத்துவது ஏன்? என்றுதான் தெரியவில்லை.
டெல்டா பகுதியில் வைரமே கிடைத்தாலும், மக்கள் விரும்பாத திட்டத்தை எத்தனை கோடி வருமானம் கிடைத்தாலும், அரசு கைவிட வேண்டும். ஜெயலலிதா ஆட்சியை விரைவில் அமைப்போம். அப்போது நாங்கள் டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக செயல்படுத்துவோம்.
தமிழகத்தில், காவல்துறை ஏவல்துறையாக செயல்படுகிறது. ரவுடிகளை கைது செய்வது சரியான நடவடிக்கை தான். சட்டம்-ஒழுங்கை காப்பாற்றும் ஆட்சியாளர்கள், குட்காவில் புகழ்பெற்றவர்களை பதவியில் வைத்து இருந்தால் அவர்கள் ஏவல் வேலையைத்தான் பார்ப்பார்கள். இது ஜெயலலிதா ஆட்சி கிடையாது. அவரது ஆட்சியில் ரவுடிகள் அடங்கி ஒடுங்கி இருந்தனர். இப்போது தலைகாட்ட ஆரம்பித்து விட்டனர். எல்லாவற்றிலும் அரசியல்-உள்நோக்கம், சுயலாபம் தான் உள்ளது.
வைத்திலிங்கம் 3 முறை எம்.எல்.ஏ. ஆனது யாரால்? அமைச்சர் ஆனது யாரால்?. 2016 தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் மக்களே அவருக்கு பதில் சொல்லி விட்டனர். வருங்காலத்தில் இவர்கள் இருக்கிற இடம் தெரியாமல் போகப்போகிறார்கள். இன்னும் 2 அல்லது 3 மாதத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும். ‘சிலீப்பர் செல்’கள் இந்த அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அவர்கள் வேலையை காண்பிப்பார்கள். மீண்டும் தேர்தல் வந்தால் நாங்கள் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story