எண்ணூர் அருகே வேன் மீது ஸ்கூட்டர் மோதியதில் பள்ளி மாணவி சாவு
எண்ணூர் அருகே நின்று கொண்டிருந்த வேன் மீது ஸ்கூட்டர் மோதியதில் பள்ளி மாணவி இறந்தார்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் காலடிப்பேட்டை எழுத்துக்காரன் தெருவை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மகள் ஜெகதீஸ்வரி (வயது 14). 9-ம் வகுப்பு படித்து வந்தார். எண்ணூர் காமராஜர் நகரை சேர்ந்த ராஜா மகள் ஜனனி (15). 10-ம் படித்து வருகிறார்.
இருவரும் ஒன்று விட்ட அக்காள், தங்கை ஆவார்கள். நேற்று முன்தினம் இரவு ஒரு ஸ்கூட்டரில் மாணவிகள் இருவரும் எண்ணூரில் உள்ள ஜனனி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை ஜனனி ஓட்டினார்.
எண்ணூரை அடுத்த கத்திவாக்கம் மேம்பாலம் அருகே சென்ற போது நிலை தடுமாறி அங்கு நின்று கொண்டிருந்த வேன் மீது ஸ்கூட்டர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜெகதீஸ்வரி பரிதாபமாக இறந்தார். பலத்த காயமடைந்த ஜனனி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே ஜெகதீஸ்வரி உடலை அவருடைய பெற்றோரும், உறவினரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்து சென்று விட்டனர். தகவலறிந்த மாதவரம் போக்குவரத்து போலீசார், திருவொற்றியூர் போலீசார் உதவியுடன் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story