தஞ்சை மாவட்டத்தில் 36 ஆயிரம் எக்டேரில் உளுந்து சாகுபடி
தஞ்சை மாவட்டத்தில் 36 ஆயிரம் எக்டேரில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கத்தை விட எள், கடலை சாகுபடி பரப்பளவும் அதிகரித்துள்ளது.
தஞ்சாவூர்,
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை 42 ஆயிரம் எக்டேரிலும், சம்பா, தாளடி 1 லட்சத்து 40 ஆயிரம் எக்டேரிலும் நடவு செய்யப்படும்.
ஆனால் தற்போது போதிய மழை இல்லாததாலும், காவிரியில் இருந்து உரிய தண்ணீர் நமக்கு கிடைக்காததாலும் அவ்வப்போது சாகுபடியின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகின்றன.
வழக்கமாக குறுவை சாகுபடி முடிந்த பின்னர் அதைத்தொடர்ந்து சம்பா, தாளடி சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் ஈடுபடுவார்கள். சம்பா, தாளடி அறுவடை நடைபெற்ற பின்னர் அந்தவயல்களில் உளுந்து சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்ளத்தொடங்கி விடுவர்.
இதில் கும்பகோணம், பாநாசம், திருவிடைமருதூர், அம்மாப்பேட்டை, திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து சாகுபடி நடைபெறும். அதாவது நெல் அறுவடை செய்வதற்கு முன்னதாகவே வயல்களில் உளுந்துவிதைகளை விதைத்து விடுவார்கள். எந்திரம் மூலமோ அல்லது தொழிலாளர்கள் மூலம் அறுவடை நடைபெறும் போது, விதைகள் மண்ணில் புதைத்து முளைத்து விடும். ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை செய்யப்பட்ட பின்னர் வயல்களில் உளுந்து விதைகளை விதைத்து அதன் பின்னர் உழவு செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 50 ஆயிரம் எக்டேரில் உளுந்து சாகுபடி செய்யப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 36 ஆயிரம் எக்டேரில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. முன்கூட்டி அறுவடை செய்யப்பட்ட இடங்களில் தற்போது உளுந்து விதைத்து முளைத்து தற்போது பூக்கள் பூத்தவண்ணம் உள்ளது. இந்த வகை உளுந்துபயிர்கள் 60 முதல் 70 நாட்களுக்கு அறுவடை செய்யப்படும். மீதமுள்ள இலக்கான 14 ஆயிரம் எக்டேரும் இன்னும் ஓரிருவாரத்துக்குள் சாகுபடி செய்யப்படும் என கூறப்படுகிறது.
தற்போது உளுந்தின் விலை குறைவாக இருப்பதாலும் பெரும்பாலான விவசாயிகள் உளுந்து சாகுபடியில் ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கு பதிலாக பணப்பயிர்களான எள், நிலக்கடலை போன்றவற்றில் ஆர்வத்தை காட்டுகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் நிலக்கடலை மட்டும் வழக்கமாக 7 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு 10 ஆயிரத்து 300 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அந்த பயிர்கள் பூக்கும் தருவாயில் உள்ளது.
இதே போல் எள்சாகுபடியும் அதிக அளவில் நடைபெற்றுள்ளது. வழக்கமாக தஞ்சை மாவட்டத்தில் 5ஆயிரம் எக்டேரில் எள் சாகுபடி செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு 7 ஆயிரத்து 500 எக்டேரில் எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கமானதை விட எள், நிலக்கடலை சாகுபடி இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக வேளாண்மைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Tags :
Next Story