முன்னாள் பெண் எம்.எல்.ஏ. வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
ராசிபுரத்தில் முன்னாள் பெண் எம்.எல்.ஏ. வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியது.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பழனியம்மாள். இவரது வீடு ராசிபுரம் காமராஜர் நகரில் உள்ளது. இவர் அ.தி.மு.க.வில் இருந்த போது எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார். தற்போது அவர் தி.மு.க.வில் உள்ளார். இவரது வீட்டில் பழனியம்மாள், மகன், மருமகள், பேரன், பேத்தியுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் இன்று(திங்கட்கிழமை) கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடி ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் சென்னைக்கு பழனியம்மாள் தனது குடும்பத்தினருடன் சென்று விட்டார்.
நேற்று இரவு 8 மணியளவில் ராசிபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு பழனியம்மாளின் மகனின் நண்பர் ஒருவர் வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக முன்னாள் எம்.எல்.ஏ. பழனியம்மாளுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் இது குறித்து தகவல் அறிந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது வீட்டுக்குள் இருந்த பொருட்கள் கலைந்து கிடந்தன. மேலும் வீட்டின் படுக்கையறையில் இருந்த பீரோ பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களும் சிதறி கிடந்தன. ஒரே ஒரு லாக்கர் மட்டும் திறக்கப்படாமல் இருந்தது. மற்ற லாக்கரில் இருந்த வெள்ளி பொருட்கள் சிதறி கிடந்தன.
வீட்டின் மாடியில் உள்ள 2 அறைகளிலும் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு கிடந்த பொருட்களும் கலைந்து கிடந்தன. இது குறித்து தகவல் கிடைத்ததும், முன்னாள் எம்.எல்.ஏ. பழனியம்மாள் உடனடியாக நாமக்கல்லுக்கு புறப்பட்டார். அவர் வந்த பிறகு தான் திருட்டு போன பொருட்களின் மதிப்பு எவ்வளவு என்று தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
ராசிபுரத்தில் முன்னாள் பெண் எம்.எல்.ஏ. வீட்டின் பூட்டை உடைத்து நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story