பால்வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; 2 வாலிபர்கள் பலி


பால்வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 12 Feb 2018 4:15 AM IST (Updated: 12 Feb 2018 4:15 AM IST)
t-max-icont-min-icon

மும்பை, பிரபாதேவி பகுதியில் உள்ள கிரிதி கல்லூரி அருகே நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டு இருந்தனர்.

மும்பை,

மோட்டார் சைக்கிள் திடீரென  கட்டுப்பாட்டை இழந்து, அந்த வழியாக சென்ற பால் வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கிவீசப்பட்ட வாலிபர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, பால்வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story