தேனியில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா; சீர்வரிசை பொருட்களை ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்
தேனியில் கர்ப்பிணிகளுக்கான வளைகாப்பு விழாவில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
தேனி
தேனியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கான வளைகாப்பு விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். விழாவில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ஆயிரத்து 400 பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பெண்கள் கருவுற்ற காலங்களில் ஏற்படுகிற வருவாய் இழப்பினை ஈடு செய்திடும் பொருட்டும், கருவுற்ற காலங்களில் கர்ப்பிணி தாய்மார்கள் நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டும், கர்ப்பிணி தாய்மார்கள் மகிழ்ச்சியடைவதன் மூலம் கருவில் இருக்கும் சிசுவின் ஆரோக்கியம் மேம்படும் என்ற நோக்கிலும், தாய் சேய் நலனை மேம்படுத்திடும் வகையிலும், சமுதாய வளைகாப்பு என்னும் சமுதாய விழிப்புணர்வு விழா பாரம்பரிய முறையில் கொண்டாடப்படுகிறது.
அதன் அடிப்படையில் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 240 கர்ப்பிணி தாய்மார்களுக்கும், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 120 பேருக்கும், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 160 பெண்களுக்கும், கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 160 பேர், க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 120 பேருக்கும், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 200 பேருக்கும், தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 120 பெண்களுக்கும், தேனி நகராட்சிக்கு உட்பட்ட 160 பேருக்கும், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 120 பேர் என மொத்தம் ஆயிரத்து 400 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகள் மற்றும் 5 வகை கலவை சாதங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் உலக தரச்சான்றிதழ் பெற்ற 4 அங்கன்வாடி மையங் களான கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலந்தளிர் அங்கன்வாடி மையம், தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிந்தநகரம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வலையப்பட்டி, உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிந்தலைச்சேரி அங்கன்வாடி மையங்களுக்கான சான்றிதழ்களையும், தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 1,065 அங்கன்வாடி மையங்களுக்கு தலா ரூ.500 மதிப்புள்ள கொசு வலைகளையும், அங்கன்வாடியில் பயிலும் 20 ஆயிரம் குழந்தைகளுக்கு ரூ.56 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் தலா 2 வண்ண சீருடைகளையும் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

Related Tags :
Next Story