மண்ணச்சநல்லூர் ஒன்றிய அலுவலகத்தை 100 நாள் வேலை உறுதி திட்ட பெண் தொழிலாளர்கள் முற்றுகை


மண்ணச்சநல்லூர் ஒன்றிய அலுவலகத்தை 100 நாள் வேலை உறுதி திட்ட பெண் தொழிலாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 Feb 2018 4:30 AM IST (Updated: 13 Feb 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் மண்ணச்சநல்லூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமயபுரம்,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் சரியாக பணிகள் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. வேலை கிடைக்காததால் வருமானத்திற்கு வழியின்றி வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் தங்களுக்கு வேலை வழங்க கோரி ஊராட்சி அலுவலகத்தில் முறையிட்டனர். அதற்கு ஊராட்சி செயலாளர் சிவலிங்கம், அரசு அறிவித்துள்ளபடிதான் வேலை வழங்க முடியும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் திருப்பைஞ்சீலி தெற்கு தெரு கணேசபுரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் நேற்று காலை மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களிடம் மண்ணச்சநல்லூர் போலீசார் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களின் கோரிக்கை சம்பந்தமாக கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து, பெண் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் பர பரப்பு ஏற்பட்டது. 

Next Story