கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர்.
ஈரோடு,
பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந்தேதி கீழ்பவானி வாய்க்கால் 2-ம் மண்டலத்துக்கும், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்களுக்கும் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கீழ்பவானி வாய்க்கால் முதல் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதனால் முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் முதலாம் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு வெண்டிபாளையம் ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்திருந்தனர். போராட்டத்துக்கு கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி தலைமை தாங்கினார். தற்சார்பு விவசாய சங்க தலைவர் பொன்னையன், கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சங்க தலைவர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் திடீரென பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரி குழந்தைவேல் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது விவசாயிகள் கூறும்போது, ‘பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் முதலாம் மண்டல பாசனத்துக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று வரை தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே நாங்கள் எள், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வதற்கு வசதியாக முதலாம் மண்டலத்துக்கு உடனடியாக தண்ணீர் திறக்க எடுக்கவேண்டும். இல்லையென்றால் நாங்கள் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர்.
அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள், ‘தண்ணீர் திறப்பு குறித்து அரசுக்கு பரிந்துரை செய்கிறோம். அரசு உத்தரவிட்டால் முதலாம் மண்டலத்துக்கு தண்ணீர் திறந்து விடுகிறோம்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story