எந்த தேர்தல் வந்தாலும் சிறப்பாக பணியாற்றி வெற்றி பெற நடவடிக்கை
சட்டமன்றம், பாராளுமன்றம், உள்ளாட்சி என்று எந்த தேர்தல் வந்தாலும் சிறப்பாக பணியாற்றி வெற்றி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஸ்பிக்நகர்,
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ஸ்பிக்நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மார்ச் 1-ந் தேதி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அப்போது, கட்சி கொடியேற்றுவது, ரத்ததானம், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்குவது, விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவது என்று தெற்கு மாவட்டத்தில் எழுச்சியோடு கொண்டாட வேண்டும். ஈரோடு மண்டல மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது, தமிழகத்தில் சட்டமன்றம், பாராளுமன்றம், உள்ளாட்சி என்று எந்த தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சிறப்பாக பணியாற்றி தி.மு.க. வெற்றி பெறுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக 20 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி தெற்கு மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றியே லட்சியம் என்று கழக செயல்வீரர்கள் பணியாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story