மூங்கில்துறைப்பட்டு அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கலெக்டரிடம் பெண்கள் மனு
மூங்கில்துறைப்பட்டு அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கலெக்டரிடம் பெண்கள் மனு கொடுத்தனர்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியனிடம் சங்கராபுரம் தாலுகா மூங்கில்துறைப்பட்டை அடுத்த பொருவளூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த பெண்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
பொருவளூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை புதிதாக திறக்கப்பட்டது. குடியிருப்பு பகுதியின் மத்தியில் இந்த கடை அமைந்துள்ளதால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. ஏனெனில் இந்த கடைக்கு மது குடிக்க வருபவர்கள் போதை தலைக்கேறியதும் குடியிருப்பு பகுதிக்குள் வந்து அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபடுகின்றனர்.
அதுமட்டுமின்றி பள்ளி- கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் கடைவீதிகளுக்கு செல்லக்கூடிய பெண்களும் இந்த டாஸ்மாக் கடையின் வழியாகத்தான் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது குடிப்பிரியர்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
எனவே இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினோம். அதன் பிறகு கடையை திறக்கவில்லை. இந்த சூழ்நிலையில் இந்த டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இங்கு டாஸ்மாக் கடை திறந்தால் எங்கள் பகுதியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் சுப்பிரமணியன், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Related Tags :
Next Story