லாரிகள் வேலைநிறுத்தம் 2-வது நாளாக நீடிப்பு: நாள் ஒன்றுக்கு 18 ஆயிரம் டன் கியாஸ் அனுப்பும் பணி பாதிப்பு
கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இதன் காரணமாக தென்மண்டலத்தில் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டரில் எரிவாயுவை நிரப்பும் மையங்களுக்கு நாள் ஒன்றுக்கு 18 ஆயிரம் டன் கியாஸ் அனுப்பும் பணி பாதிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல்,
தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தினர் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்ய மாநில அளவில் டெண்டர் நடத்த எதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் பழைய முறைப்படி மண்டலம் வாரியாக டெண்டர் நடத்தவேண்டும் என வலியுறுத்தியும் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் காரணமாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சுமார் 4,200 கியாஸ் டேங்கர் லாரிகள் நேற்று 2-வது நாளாக இயக்கப்படவில்லை. இதனால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டரில் எரிவாயுவை நிரப்பும் மையங்களுக்கு (பாட்லிங் பிளாண்டு) கியாஸ் எடுத்து செல்லும் பணி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த போராட்டம் காரணமாக டிரைவர், கிளனர் உள்ளிட்ட சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்களும் வேலையிழந்து தவித்து வருகின்றனர். போராட்டம் நீடித்து வருவதால், நாமக்கல்லில் நிறுத்தப்பட்டு இருந்த கியாஸ் டேங்கர் லாரிகளை பட்டறைகளில் விட்டு சிறிய அளவில் உள்ள பழுதுகளை நீக்கும் பணியில் டிரைவர்கள் இறங்கி உள்ளனர். இதனால் பட்டறைகளில் அதிகளவில் டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருப்பதை காணமுடிகிறது. இதேபோல் பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் ஆங்காங்கே டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த போராட்டம் குறித்து தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் கூறியதாவது:- மண்டல அளவில் டெண்டர் நடத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களின் போராட்டம் காரணமாக எண்ணெய் நிறுவனங்களில் இருந்து சிலிண்டரில் எரிவாயு நிரப்பும் மையங்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 18 ஆயிரம் டன் கியாஸ் அனுப்பும் பணி தடைபட்டு வருகிறது. இதேநிலை நீடித்தால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
அதேநேரத்தில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள், மாநில அளவிலான டெண்டரில் எங்களுக்கு உள்ள சில பாதகமான நிபந்தனைகளை தளர்த்த பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றனர். அதில் கலந்துகொள்வதா? இல்லையெனில் மண்டல அளவிலான டெண்டர் முறைதான் வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதா? என்பதை விரைவில் முடிவுசெய்து அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்கள் உள்ளடக்கிய கிழக்கு மண்டலத்திலும் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டமும் நேற்று 2-வது நாளாக நீடித்தது.

Related Tags :
Next Story