20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2018 4:15 AM IST (Updated: 14 Feb 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடியில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சியின் பரப்பளவு மற்றும் விரிவாக்கத்திற்கேற்பவும், மக்கள் தொகை எண்ணிக்கை உயர்வுக்குகேற்பவும் நகராட்சியில் கூடுதல் துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டும். நகராட்சி காலிப்பணியிடங்களை நிரப்ப மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி தொகுப்பூதிய துப்புரவு பணியாளர்கள் 16 பேருக்கு பணிவரன்முறை நிலுவை ஊதியம் வழங்க வேண்டும்.

தகுதியுள்ள துப்புரவு பணியாளர்களுக்கு அரசு ஆணைப்படி துப்புரவு மேற்பார்வையாளர் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யூ.) சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க கவுரவ தலைவர் ரெகுபதி தலைமை தாங்கினார். சம்மேளன மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் முனியாண்டி, மாநிலக்குழு உறுப்பினர் லோகநாயகி, மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ், கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story