கார் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி; நண்பர் படுகாயம் டிரைவர் கைது
குடவாசல் அருகே கார் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலியானார். மேலும் அவரது நண்பரும் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
குடவாசல்,
தஞ்சை மாவட்டம், திருநாகேஸ்வரம் மணல்மேட்டு தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் சுரேந்தர் (வயது 25). அதே ஊர் பவுண்டர் தெருவை சேர்ந்த சேகர் மகன் சுதாகர் (30). நண்பர்களான இவர்கள் 2 பேரும் வேளாங்கண்ணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சுரேந்தர் ஓட்டினார். குடவாசல் அருகே உள்ள காப்பணாமங்கலம் (எண்கண் ஆர்ச்) என்ற இடத்தில் சென்றபோது எதிரே கார் வந்துள்ளது. இந்த காரை சென்னை பம்மலை சேர்ந்த பூமிபாலன் மகன் ஹரிஹரசுதன் (34) ஓட்டி வந்தார். அப்போது எண்கண் சாலையில் இருந்து மனநலம் குன்றிய ஒருவர் சாலையின் குறுக்கே வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் வேகமாக வந்த கார் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
வாலிபர் பலி
இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு அருகில் உள்ள வாய்க்காலில் விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுதாகர் உயிரிழந்தார். சுரேந்தருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரசுதனை கைது செய்தனர்.

Related Tags :
Next Story