உச்சிப்புளி அருகே காவலாளி அடித்து கொலை; 2 பேருக்கு 5 ஆண்டு ஜெயில்


உச்சிப்புளி அருகே காவலாளி அடித்து கொலை; 2 பேருக்கு 5 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 14 Feb 2018 3:45 AM IST (Updated: 14 Feb 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

உச்சிப்புளி அருகே காவலாளியை கொலை செய்த 2 வாலிபர்களுக்கு 5 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

ராமநாதபுரம்,

உச்சிப்புளி அருகே உள்ள கீழநாகாச்சி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் செந்தில்குமார் (வயது 32). இவர் சாலைவலசை கிராமத்தில் உள்ள இறால்பண்ணையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அந்த பண்ணையின் அருகில் சிலர் அடிக்கடி வந்து மது அருந்தினார்களாம். இதை கடந்த 2015-ம் ஆண்டு ஜுலை 16-ந்தேதி காவலாளி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் உருட்டுக்கட்டையால் தாக்கி செந்தில்குமாரை கொலை செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உச்சிப்புளி போலீசார் வழக்குபதிவு செய்து மரவெட்டிவலசையை சேர்ந்த முருகேசன் மகன் செல்வகளஞ்சியம் (24), பாலு மகன் கார்த்திகேயன் (23), முருகன் மகன் ராம்குமார் (22), மணிகண்டன் மகன் அருள்மணிகண்டன்(24), துத்திவலசையை சேர்ந்த மலைச்சாமி மகன் உதயகுமார் ஆகியோரை கைதுசெய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன் காவலாளி செந்தில்குமாரை கொலை செய்த செல்வ களஞ்சியம், கார்த்திகேயன் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், ராம்குமார், அருள்மணிகண்டன் ஆகியோருக்கு தலா ரூ.13 ஆயிரம் அபராதமும், உதயகுமாருக்கு ரூ.20 ஆயிரமும், அபராதத்தை கட்ட தவறுபவர்களுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல்கள் வெங்கடேசன், ஜெய்சங்கர் ஆகியோர் ஆஜரானார்கள். 

Related Tags :
Next Story