வில்லியனூர் அருகே ஆற்றில் மணல் எடுப்பதில் தகராறு; வாலிபர் சரமாரி வெட்டி கொலை
வில்லியனூர் அருகே ஆற்றில் மணல் அள்ளுவதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் வாலிபர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
வில்லியனூர்,
புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள உத்திரவாகிணிபேட் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவருடைய மகன் ஏழுமலை (வயது 23). மாட்டு வண்டி தொழிலாளி.
நேற்று முன்தினம் இரவு ஏழுமலை அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் ஜெகதீஷ், ரவீந்திரன், கரிக்கலாம்பாக்கம் ரத்தினம் ஆகியோருடன் அங்குள்ள சங்கராபரணி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் லோடு எடுத்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பினார். பின்னர் வீட்டின் முன்பு உள்ள இடத்தில் நண்பர்களுடன் ஏழுமலை படுத்து தூங்கினார். வீட்டுக்குள் ஏழுமலையின் தந்தை தண்டபாணி, தாய் சரஸ்வதி ஆகியோர் படுத்திருந்தனர்.
இந்த நிலையில் நள்ளிரவு 2.30 மணியளவில் 5 பேர் கொண்ட மர்மகும்பல் மோட்டார் சைக்கிள்களில் ஏழுமலையின் வீட்டுக்கு வந்தது. நண்பர்களுடன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ஏழுமலையை அந்த கும்பல் அரிவாள், கத்தி உள்பட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதை கண்டு திடுக்கிட்டு எழுந்த ஏழுமலையின் நண்பர்கள் தடுக்க முயன்றனர். இதில் ஜெகதீசுக்கு காலிலும், ரவீந்திரன், ரத்தினம் ஆகியோருக்கு கைகளிலும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடிவந்தனர். உடனே அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்களின் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பிச் சென்று விட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஏழுமலையை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக இறந்துபோனார். வெட்டுக்காயம் அடைந்த மற்றவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா, போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகீம் (பொறுப்பு), இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், கலைச்செல்வன், சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஏழுமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஜெகதீஷ் உள்பட 3 பேரிடமும் விசாரித்தனர். ஜெகதீஷ் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரித்தனர்.
விசாரணையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்திரவாகிணிபேட் பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் முக்கிய குற்றவாளியான ஏழுமலைக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவி என்கிற ரவிவர்மனுக்கும் (22) சங்கராபரணி ஆற்றில் மணல் எடுத்து, விற்பனை செய்வது தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
இது தொடர்பாக ரவிக்கும், ஏழுமலைக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து ரவி மற்றும் அவரது நண்பர்களான காலாப்பட்டு ரவுடி சுகன், வில்லியனூர் அம்பேத்கர் நகர் அய்யப்பன், புதுப்பேட் தனசேகர், உத்திரவாகிணிபேட் மோகன் ஆகிய 5 பேர் நேற்று அதிகாலையில் ஏழுமலையை கொலை செய்துள்ளனர். இவர்கள் 5 பேர் மீதும் போலீசில் ஏற்கனவே கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இதற்கிடையில் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி ஏழுமலையின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் ரவியின் கூட்டாளியான மோகனின் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
பின்னர் வில்லியனூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட அவர்கள், சாலைமறியலிலும் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். இதையத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
தப்பிச்சென்ற கொலையாளிகளை கைது செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் கொலையாளிகளை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் நண்பர்கள் சிலரை பிடித்து, அவர்கள் எங்கு பதுங்கியிருக்கிறார்கள் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

Related Tags :
Next Story