திருப்பூரில் கத்தியை காட்டி மிரட்டி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையை கட்டிப்போட்டு 10 பவுன் சங்கிலி கொள்ளை
திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையை கத்தியை காட்டி மிரட்டி அவரை கட்டிப்போட்டு 10 பவுன் சங்கிலியை கொள்ளையடித்து தப்பிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருப்பூர்,
திருப்பூர் கருவம்பாளையம் ஏ.பி.டி. ரோடு பகுதியை சேர்ந்தவர் அருக்காணி (வயது 71). ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை. இவருடைய மகன் சிவக்குமார். மகள் கவிதா. திருமணம் முடிந்து சிவக்குமார் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திலும், கவிதா தனது குடும்பத்துடன் கருவம்பாளையத்திலும் குடியிருந்து வருகிறார்கள். அருக்காணி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
அருக்காணிக்கு சமையல் செய்து கொடுப்பதற்காக முருகம்பாளையத்தை சேர்ந்த புஷ்பா(40) என்ற பெண் வீட்டு வேலைக்காக கடந்த வாரம் சேர்க்கப்பட்டார். நேற்று காலை வழக்கம் போல் புஷ்பா, அருக்காணி வீட்டுக்கு வந்து சமையல் செய்துள்ளார். பின்னர் காலை 10.30 மணிக்கு புஷ்பா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
வீட்டின் முன்புற கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு அருக்காணி வீட்டின் பின்புறம் உள்ள அறையில் இருந்துள்ளார்.
அந்த நேரத்தில் மர்ம வாலிபர் ஒருவர் வீட்டின் வெளிப்புற வாசல் கதவை திறந்து வீட்டின் பின்புறமாக சென்றுள்ளார்.
அங்கிருந்த அருக்காணியை அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி வீட்டுக்குள் படுக்கை அறைக்கு இழுத்துச்சென்றுள்ளார். பின்னர் சேலையால் அருக்காணியின் கைகளை சேர்த்து கட்டி அமர வைத்துள்ளார். அவர் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை கொள்ளையடித்த அந்த ஆசாமி, வீட்டுக்குள் ஒவ்வொரு அறையாக சென்று அங்கிருந்த பீரோக்களை திறந்து நகை, பணத்தை தேடியுள்ளார்.
அந்த நேரத்தில் அருக்காணி தனது கைகளை அவிழ்த்து விட்டு, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து சத்தம் போட்டுள்ளார். இதைப்பார்த்த அந்த ஆசாமி வீட்டின் முன்பக்க கதவை திறந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி தப்பினார். பின்னர் இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் அருக்காணி விவரத்தை தெரிவித்தார்.
சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரனை நடத்தினர்.இதில் கொள்ளையடித்து சென்ற நபருக்கு 25 வயதில் இருந்து 30 வயதுக்குள் இருக்கும் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டில் தனியாக இருப்பதை நன்கு தெரிந்து கொண்டு அந்த ஆசாமி அருக்காணியை மிரட்டி நகையை பறித்துச்சென்றுள்ளார்.
மேலும் அந்த வீதியில் பொருத்திய இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Related Tags :
Next Story