ஆத்தூர் பஸ் நிலையத்தில் மருந்து கடை பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் திருட்டு
ஆத்தூர் பஸ் நிலையத்தில் மருந்து கடை பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆத்தூர்,
ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சி முட்டல் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் ஆத்தூர் புதிய பஸ் நிலையத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மருந்து கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலையில் மீண்டும் கடையை திறக்க வந்த மணிகண்டன் தனது கடை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் உள்ளே சென்று பார்த்த போது, நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர் கடைக்குள் புகுந்து, மேஜை டிராயரில் இருந்த ரூ.80 ஆயிரத்தை திருடி விட்டு சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் ஆத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் அமிர்தலிங்கம், சேகர் மற்றும் போலீசார் திருட்டு நடந்த கடையை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் ஆத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டும் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நள்ளிரவில் ஆத்தூர் புதிய பஸ்நிலையத்தில் மருந்து கடை பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story