மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா நிதி உதவி


மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா நிதி உதவி
x
தினத்தந்தி 15 Feb 2018 4:00 AM IST (Updated: 15 Feb 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி அம்பிகாபதி தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் வெற்றிபெற்று பதக்கங்கள் பெற்றுள்ளார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி அம்பிகாபதி தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் வெற்றிபெற்று பதக்கங்கள் பெற்றுள்ளார். சமீபத்தில் மதுரையில் நடந்த தமிழ்நாடு அளவிலான பாரா ஒலிம்பிக் 200 மீட்டர் நீச்சல் போட்டியில் வெற்றி பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார். மேலும் கர்நாடகா, டெல்லி, மத்தியபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டிகளில் தங்கம், வெள்ளி பதக்கங்கள் பெற்றுள்ளார். இதையடுத்து வீராங்கனை அம்பிகாபதிக்கு தி.மு.க.கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா நிதி உதவி வழங்கி கவுரவித்து, பாராட்டு தெரிவித்தார். அப்போது மாவட்ட செயலாளர்கள் குன்னம் ராஜேந்திரன், சிவசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story