ஆன்-லைன் மூலம் பத்திரப்பதிவு செய்ய காலதாமதம்: உடுமலையில் ஆவண எழுத்தர்கள் வேலைநிறுத்தம்
ஆன்-லைன் மூலம் பத்திரப்பதிவுக்கு காலதாமதம் ஏற்படுவதை கண்டித்து உடுமலை ஆவண எழுத்தர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை,
பத்திரப்பதிவு துறையில் பத்திரங்களை பதிவு செய்தல், வில்லங்க சான்று பெறுதல் உள்ளிட்ட பதிவுகள் அனைத்தையும் ஆன்-லைன் மூலமாக செய்யவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஆன்-லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் ஆன்-லைன் மூலம் பத்திரப்பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்களும், ஆவண எழுத்தர்களும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆன்-லைன் முறை பத்திரப்பதிவில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்கவும், அவ்வாறு காலதாமதம் ஏற்படும் நேரங்களில், பழைய முறையிலும் பத்திரப்பதிவு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்து உடுமலையில் உள்ள ஆவண எழுத்தர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், அவர்கள் பத்திரப்பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடவில்லை.
மேலும் உடுமலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ஆவண எழுத்தர்கள் நேற்று உடுமலை கச்சேரி வீதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து தங்கள் கோரிக்கைகளை வாய்மொழியாக தெரிவித்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உடுமலை பகுதி ஆவண எழுத்தர்கள் கூறியதாவது:-
பத்திரப்பதிவு துறையில் ஆவணங்களை பதிவு செய்யும் முறையை எளிமைப்படுத்துவதற்காக அவை ஆன்-லைன் மூலம் பதிவு செய்யப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. சொத்து சம்பந்தமான பத்திரங்களை முன்பு இருந்த நடைமுறையில் உடனடியாக பதிவு செய்யமுடிந்தது.
இப்போது ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய ஒரு நாள் முழுவதும் பொதுமக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் கணினியில் கோளாறு, இணைய இணைப்பில் கோளாறு, சர்வர் கோளாறு என்றால் அன்றைய தினம் பதிவு செய்யமுடியாமல் அடுத்த நாளோ அல்லது அதற்கு அடுத்த நாளோ வரவேண்டியுள்ளது. பத்திரப்பதிவுக்காக சிலர் விடுமுறை எடுத்துக்கொண்டு வெளியூரில் இருந்து வந்திருப்பார்கள்.
அவர்கள் நாள் முழுவதும் காத்திருந்துவிட்டு அடுத்தநாள் வரவேண்டியுள்ளதால் பொதுமக்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் சொத்து சம்பந்தப்பட்ட வில்லங்க சான்று பெறுவதிலும் இதே நிலை தான் உள்ளது.
இதன்காரணமாக அனைத்து ஆவண எழுத்தர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழக அரசின் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து, சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்-லைன் மூலம் பத்திரப்பதிவு செய்ய காலதாமதம் ஏற்பட்டால், பழைய நடைமுறையில் பத்திரப்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story