ஜவ்வாதுமலையில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புதைவிடம் கண்டுபிடிப்பு
ஜவ்வாதுமலையில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புதைவிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாடு, புங்கம்பட்டுநாடு, நெல்லிவாசல்நாடு ஊராட்சிகளுக்கு உட்பட்டு 32 மலை கிராமங்கள் உள்ளன. இதில் புங்கம்பட்டுநாட்டிற்கு உட்பட்ட கல்லாவூர் கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புதைவிடம் ஒன்றை திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் க.மோகன்காந்தி, சென்னை மாநில கல்லூரி தமிழ் பேராசிரியர் கே.ஆர்.லட்சுமி, காணி நிலம் மு.முனிசாமி, ஓய்வுப்பெற்ற ஆசிரியர் ராமன், ஜவ்வாதுமலையை சேர்ந்த ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய குழு கள ஆய்வு மேற்கொண்ட போது கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து பேராசிரியர் க.மோகன்காந்தி கூறியதாவது:-
ஜவ்வாதுமலையில் ஏராளமான வரலாற்று பொக்கிஷங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. அவ்வகையில் கல்வட்டம், கற்திட்டை அதனுள்ளே முதுமக்கள் தாழி (பானை) என ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தமிழர் பண்பாட்டில் பின்பற்றப்பட்ட புதைவிடம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
தாழியில் புதைக்கும் பழக்கம்
பழந்தமிழர் இறந்த முன்னோரை தாழியில் வைத்து புதைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். இதற்கு முதுமக்கள் தாழி என்று பெயர். கணவன் இறந்ததால் மனைவியும் அதே ஈமத்தாழியில் கணவனோடு தன்னை சேர்த்து புதைத்து விடுமாறு பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. எனவே, சங்க காலத்திற்கு முன்பிருந்த ஈமத்தாழியில் இறந்தோரை புதைக்கும் வழக்கம் இருந்துள்ளதை அறியலாம்.
இப்பழங்கால புதைவிடங்கள் தற்போது கல்லாவூரில் பெரிய பலாமரங்களுக்கு அருகாமையில் சின்னஅனுமன் என்பவரின் நிலத்தில் அடர்ந்த மூங்கில் மரங்களுக்கு இடையில் உள்ள வேளாண் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. மொத்தம் 4 கற்திட்டைகள் உள்ளன. 60 அடிகளில் கல்வட்டங்களும் அதற்குள்ளாக கற்திட்டைகளும் அதற்கும் உள்ளாக இந்த முதுமக்கள் தாழிகளும் உள்ளன. இத்தாழிகளில் சாம்பல் போன்ற பொருட்களும், எலும்பு துண்டுகளும் கண்டதாக அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.
ஆபரண பொருட்கள்
ஓராண்டுக்கு முன்பாக பானைகள் வெளியில் தெரிந்திருந்ததை ஆய்வாளர் கோவிந்தராஜ் கண்டுள்ளார். ஆனால் தற்போது மண்ணால் கற்திட்டைகளுக்குள் இருந்த பானையை மூடியுள்ளனர். இதில் கோவிலில் உள்ள தெய்வத்தின் ஆபரண பொருட்கள் இருப்பதாகவும், இதன் உள்ளே பெரிய பாம்பு இருப்பதாகவும் ஊர் மக்கள் நம்புகின்றனர். இதனை அகழாய்வுக்கு உட்படுத்தி பானையிலுள்ள பொருட்களை கார்பன் 14 சோதனைக்கு உட்படுத்தினால் இதன் பழமையை அறிவியல் பூர்வமாக அறியலாம்.
இதுபோன்ற கற்திட்டைகள் ஜவ்வாதுமலையில் கீழ்சேம்பள்ளி, கோம்பை போன்ற பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கல்வட்டம், கற்திட்டை, முதுமக்கள் தாழி ஆகிய மூன்றும் ஒரே இடத்தில் அமைந்திருப்பது இங்கு முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் என்னும் ஊரிலும், தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் உள்ள பெருங்குளத்தூர் பகுதியிலும் இன்னும் ஏராளமான இடங்களிலும் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மலையும், மலைசார்ந்த ஜவ்வாதுமலை பகுதியில் காண கிடைத்திருப்பது இதுவே முதன் முறையாகும். மேலும் இதனை தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்து, ஆவணப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story