கடன் பிரச்சினையால் அரளிவிதையை அரைத்து தின்று குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை முயற்சி


கடன் பிரச்சினையால் அரளிவிதையை அரைத்து தின்று குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 15 Feb 2018 3:00 AM IST (Updated: 15 Feb 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

கடன் பிரச்சினையால் அரளிவிதையை அரைத்து சாப்பாட்டில் கலந்து 2 குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு அதனை தம்பதியும் சாப்பிட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குறிச்சி ஆசாரி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 34). இவருடைய மனைவி மாலதி (30). இந்த தம்பதிக்கு கனிஷ்கா (10) என்ற மகளும், கார்த்திக் (7) என்ற மகனும் உள்ளனர். கனிஷ்கா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பும், கார்த்திக் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

செந்தில்குமார் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவர் சொந்தமாக வீடு கட்ட முடிவு செய்தார். ஆனால் அவரிடம் பணம் இல்லாததால் கடன் வாங்கி வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார். பாதி வேலைகள் முடிந்த நிலையில் பணம் இல்லாததால், செந்தில்குமார் வீட்டு வேலையை தொடர முடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும் கடனையும் அடைக்க முடியாததால் தம்பதியினர் வேதனையில் இருந்துள்ளனர்.

இதனால் மனம் உடைந்த அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த னர். ஆனால் தாங்கள் இறந்துவிட்டால் தங்களுடைய குழந்தைகள் அனாதையாகி விடுவார்கள் என்பதால், அவர் களுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்ய முடிவு செய்தனர். குழந்தைகள் இருவரும் அருகில் உள்ள பள்ளியில் படிப்பதால் மதிய சாப்பாட்டுக்கு தினமும் வீட்டுக்கு வருவது வழக்கம்.

அதன்படி நேற்று மதியம் கனிஷ்காவும், கார்த்திக்கும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு சாப்பிட வந்தனர். தம்பதியினர் ஏற்கனவே அரளிவிதையை அரைத்து சாப்பாட்டில் கலந்து வைத்திருந்தனர். பின்னர் பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல், மனதை கல்லாக்கிக்கொண்டு அவர்களுக்கு விஷம் கலந்த சாப்பாட்டை கொடுத்துள்ளனர். மேலும் செந்தில்குமாரும், மாலதியும் அந்த சாப்பாட்டை சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் அனைவரும் மயக்கம் அடைந்துள்ளனர்.

சாப்பிட சென்ற குழந்தைகள் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் செந்தில்குமாரின் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வாயில் நுரை தள்ளியபடி குழந்தைகளுடன், தம்பதி மயங்கி கிடப்பதை பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்களை மீட்டு எஸ்.குரும்பப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர் களை மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் டாக்டர்கள் அவர்களை பரிசோதனை செய்த போது மாலதி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. செந்தில்குமார் மற்றும் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் கடன் தொல்லையால் தற்கொலைக்கு முயற்சி செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா? என்று வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story