கந்தூரி விழாவை முன்னிட்டு சாலையை சீரமைக்க சென்ற அதிகாரிகளை, பொதுமக்கள் முற்றுகை
கந்தூரி விழாவை முன்னிட்டு சாலையை சீரமைக்க சென்ற அதிகாரிகளை, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் நாகூரில் பரபரப்பு ஏற்பட்டது.
நாகூர்,
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவிற்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்வது வழக்கம். இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கந்தூரி விழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான கொடி நாகையில் இருந்து ரதங்களில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு நாகூர் குஞ்சாலி மரைக்காயர் தெரு உள்ளிட்ட பகுதிகளின் வழியாக தர்காவிற்கு வந்து கொடியேற்றப்படும். இந்த கொடி ஊர்வலத்திற்காக குஞ்சாலி மரைக்காயர் தெரு பகுதியில் உள்ள சாலையை சீரமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதற்காக சாலை அமைப்பதற்கான வாகனங்கள் மற்றும் எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த அருகில் உள்ள பண்டாலை சாலை தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து சாலை அமைப்பதற்காக கொண்டு வரப்பட்ட வாகனங்கள் மற்றும் எந்திரங்களை சிறைபிடித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டு சாலை பணிகளை தடுத்து நிறுத்தினர். அப்போது நகராட்சி உதவி பொறியாளர் வசந்தன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கவர்னரை முற்றுகையிடுவோம்
அப்போது, நாகை நகராட்சியின் 4-வது வார்டு பகுதியான பண்டாலை சாலை தெரு பகுதியில் உள்ள சாலைகள் கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் சென்று வர பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த சாலையில் வந்த ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் சென்ற பெண் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த பகுதி சாலையை சீரமைக்க ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை சீரமைக்கப்படவில்லை. எனவே, பண்டாலை சாலையை சீரமைத்துவிட்டு, அதன்பிறகு இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பண்டாலை சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த சாலை பணிகள் முடிவடைந்தவுடன், இரண்டு நாட்களில் பண்டாலை சாலை சீரமைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து 2 நாட்களில் பண்டாலை சாலை சீரமைக்கப்படவில்லை என்றால் வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாகூருக்கு வருகை தரும் தமிழக கவர்னரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் கூறினர். பின்னர் பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் குஞ்சாலி மரைக்காயர் தெரு சாலை சீரமைக்கும் பணி தொடங்கியது. சாலை அமைக்க வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால், நாகூரில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story