புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் உண்டியல் திருட்டு


புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் உண்டியல் திருட்டு
x
தினத்தந்தி 16 Feb 2018 3:45 AM IST (Updated: 16 Feb 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

நேற்று முன்தினம் இரவு ஆலயத்தின் மேற் கூரையில் உள்ள ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள், ஆலயத்தில் இருந்த உண்டியலை திருடி சென்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை காமராஜபுரம் 17–ம் வீதியில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஆலயத்தின் மேற் கூரையில் உள்ள ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள், ஆலயத்தில் இருந்த உண்டியலை திருடி சென்றனர். அந்த உண்டியலில் பல ஆயிரக்கணக்கில் ரூபாய் இருந்திருக்கும் என்று அந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கணேஷ்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story