ரூ.25½ கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரி


ரூ.25½ கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரி
x
தினத்தந்தி 16 Feb 2018 4:45 AM IST (Updated: 16 Feb 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

கடத்தூரில் ரூ.25½ கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரியை சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு சட்ட மன்ற அரசு உறுதிமொழி குழுத்தலைவர் ராஜா தலைமை தாங்கினார். கலெக்டர் விவேகானந்தன் வரவேற்று பேசினார். அரசு உறுதிமொழி குழுவின் உறுப்பினர்கள் பொன்முடி,அருண்குமார், எழிலரசன், குணசேகரன், பெரியபுள்ளான் என்கிற செல்வம், மனோதங்கராஜ், மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர். எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்ரமணி, பி.என்.பி. இன்பசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சுற்றுலாத்துறை, போக்குவரத்துறை, உயர்கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சுற்றுச்சூழல், வனத்துறை, கூட்டுறவுத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மக்களின் நலன்கள் சார்ந்த அடிப்படை தேவைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் 20 துறைகள் சார்ந்த 72 கோரிக்கைகளை நிறைவேற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் 32 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 23 கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாவட்ட கலெக்டரின் அனுமதியை பெற்றும், சம்பந்தப்பட்ட தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களை அணுகியும் நிலுவையில் உள்ள மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற துறை சார்ந்த அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆய்வு கூட்டத்தை தொடர்ந்து கடத்தூரில் ரூ.25.66 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியை அரசு உறுதிமொழி குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் கட்டுமான பணிகள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தனர். இந்த ஆய்வின்போது தலைமை செயலக இணைச் செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், மாவட்ட வன அலுவலர் திருமால், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காளிதாசன், உதவி கலெக்டர்கள் ராமமூர்த்தி, பத்மாவதி, சார்பு செயலாளர் சுஜாதாதேவி மற்றும் அரசு துறைகள் சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story