கள்ளத்துப்பாக்கி விற்ற வழக்கு: சிறையில் அடைக்கப்பட்ட புரோக்கரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
கள்ளத்துப்பாக்கிகளை விற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட புரோக்கரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்கிறார்கள்.
திருச்சி,
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு ஓட்டலில் கடந்த மாதம் 27–ந் தேதி போலீசார் நடத்திய சோதனையில் கள்ளத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்து இருந்த சென்னையை சேர்ந்த போலீஸ்காரர் பரமேஸ்வரன், அவருடைய உறவினர் நாகராஜன், பட்டுக்கோட்டையை சேர்ந்த சிவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து உரிமம் இல்லாத 2 துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.
திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஜென்னிங்ஸ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த கலைசேகர், வி.கே.புதூரை சேர்ந்த எட்டப்பன், சென்னையை சேர்ந்த திவ்யபிரபாகரன் ஆகியோருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்ததால் அவர்களையும் கைது செய்தனர்.
காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
கைது செய்யப்பட்ட 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். அப்போது இவர்களுக்கு மத்திய பிரதேசத்தை சேர்ந்த புரோக்கர் கிருஷ்ண முராரிதிவாரி(வயது 30) துப்பாக்கிகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து புரோக்கர் கிருஷ்ணமுராரி திவாரியையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் இதுவரை எத்தனை பேருக்கு துப்பாக்கிகள் விற்கப்பட்டுள்ளது. யார்? யாரெல்லாம் துப்பாக்கிகளை விலைக்கு வாங்கி உள்ளனர் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்காக சிறையில் அடைக்கப்பட்ட புரோக்கர் கிருஷ்ண முராரி திவாரியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று(வெள்ளிக்கிழமை) கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Tags :
Next Story