உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
ஏத்தாப்பூர் அருகே நடந்த தச்சு தொழிலாளி கொலை செய்த விவகாரத்தில் சேலத்தில் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே தும்பல் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 48). தச்சு தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (30). இவரது தம்பி இளையரசன் (28). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு அய்யம்பேட்டை அரசமரத்து பிள்ளையார் கோவிலில் வைத்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாலசுப்பிரமணியன், பொது இடத்தில் ஏன் மது அருந்துகிறீர்கள் எனக்கூறி அவர்களை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிலம்பரசன், இளையரசன் ஆகியோர் பாலசுப்பிரமணியனை கத்தியால் குத்திக்கொலை செய்தனர். மேலும், தடுக்க வந்த அவரது உறவினர் நடராஜன் என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஏத்தாப்பூர் போலீசார், இளையரசனை உடனே கைது செய்தனர். மேலும், தலைமறைவான சிலம்பரசனை வலைவீசி தேடி வருகின்றனர். தச்சு தொழிலாளி கொலையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த பாலசுப்பிரமணியின் உடல் நேற்று காலையில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் பாலசுப்பிரமணியனின் மனைவி ஜானகி, மகள்கள் சுஷ்மிதா, கிருத்திகா, மகன் சசிக்குமார் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர்.
கொலையில் தொடர்புடைய அனைவரையும் கூண்டோடு கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அத்துடன் தும்பல் பகுதியில் உள்ள மதுக்கடையால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் அதை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகளை நிறைவேறும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்த அவர்கள், திடீரென சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பாலசுப்பிரமணியனின் மனைவி, மகள்கள், மகன் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதையடுத்து அவர்களிடம் டவுன் இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கலெக்டரிடம் புகார் மனு கொடுக்குமாறும் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜய்பாபுவிடம் புகார் மனுவை அளித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story