கடலூரில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் 82 பேர் கைது
கடலூரில், சாலை மறியல் போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் 82 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
34 ஆண்டுகளாக தொகுப்பூதியம், சிறப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வந்த சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் குடும்ப ஓய்வூதியம், 21 மாதங்களாக வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். அதன்படி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கடலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபடுவதற்காக பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் திரண்டனர்.
பின்னர் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பேசினர். தொடர்ந்து கண்டன கோஷமிட்டபடி பழைய கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பானுமதி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் அன்பழகன், நடராஜன், சுந்தரமூர்த்தி, தணிகாசலம் உள்பட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து சாலை மறியல் போராட்டம் நடத்திய 42 பெண்கள் உள்பட 82 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story