விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Feb 2018 3:45 AM IST (Updated: 17 Feb 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயமுருகன், செயலாளர் முருகன் ஆகியோர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

விருதுநகர்,

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயமுருகன், செயலாளர் முருகன் ஆகியோர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2016-17-ம் ஆண்டில் மாவட்டம் முழுவதும் கடுமையான வறட்சி ஏற்பட்டது. அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் விவசாய நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும் 2016-17 -ம் ஆண்டிற்கான பயிர்காப்பீட்டு தொகை என்பது அனைத்து வகை பயிர்களுக்கும் உள்ளதாகும். ஆனால் நெல் பயிறுக்கு மட்டுமே அரசு இழப்பீட்டுத்தொகை வழங்கியுள்ளது. மற்ற பயிர்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கவில்லை.

 இது தொடர்பாக நாங்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தி உள்ளோம். எனவே விவசாயிகளுக்கு சேர வேண்டிய பயிர் இழப்பீட்டு தொகையை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதே போன்று தமிழ் விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரெங்குதாசும் கலெக்டரிடம் பயிர் இழப்பீட்டுத்தொகை வழங்க கோரி மனு கொடுத்தார். முன்னதாக விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

Next Story