பெரம்பலூரில் மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்பார்வை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
பெரம்பலூர்,
சி.ஐ.டி.யூ.வுடன் இணைந்த பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் பி.எம்.எஸ்., என்.எல்.ஓ. உள்ளிட்டவற்றுடன் இணைந்த மின்ஊழியர் சங்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 16-ந்தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்ட மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி பெரம்பலூர் நான்கு ரோடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் காசிநாதன், அமுதா, கண்ணன் ஆகியோர் பேசினர். பெரம்பலூர் கோட்ட செயலாளர் பன்னீர்செல்வம், பி.எம்.எஸ். மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கூட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில், மின்வாரியம் சார்பிலான ஊதிய உயர்வில் அதிகாரிகள், ஊழியர்கள் என்கிற பாகுபாட்டை புகுத்தக் கூடாது. காலநிலை பதவி உயர்வினை உத்தரவாதப்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 45 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த ஊழியர்களையும்-ஐ.டி.ஐ. படித்தவர்களையும் பணிக்கு அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பெரம்பலூர் மாவட்ட மின்வாரியத்துறை மின் ஊழியர்கள், மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக பெரம்பலூர் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். வேலை நிறுத்த போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை அறியாமல் புதியமின் இணைப்பு பெறுவது, அறுந்து கிடந்த மின்கம்பிகளை சீரமைப்பது, மீட்டர் பெட்டி பழுதினை சரிபார்ப்பது உள்ளிட்டவற்றுக்காக மின்ஊழியர்கள், அதிகாரிகளை நாடி வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பின்னர் அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர். மின்கட்டணம் செலுத்துவதற்காக இருந்த 4 கவுண்ட்டர்களில் 2-ல் மட்டும் தான் ஊழியர்கள் இருந்தனர். இதனால் மின்கட்டணம் செலுத்துவோர் நீண்ட வரிசையில் நின்று கட்டணத்தை செலுத்தி ரசீதை பெற்று சென்றனர்.

Related Tags :
Next Story