சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சி: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், நாராயணசாமி வலியுறுத்தல்
காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
காவிரி நதிநீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு குறித்து முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி நதிநீர் பங்கீடு சம்மந்தமாக சுப்ரீம் கோர்ட்டு இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது. பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற வழக்கில், புதுச்சேரி மாநிலத்தின் கோரிக்கையான 7 டி.எம்.சி. தண்ணீர் உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம், தமிழகத்திற்கு எவ்வளவு நீர் தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
காரைக்கால் கடைமடைப் பகுதியாக உள்ள இடம். எனவே அங்குள்ள விவசாயிகள் வெள்ளம் என்றாலும், வறட்சியின் போதும் பாதிக்கப்படுவார்கள். 7 டி.எம்.சி. தண்ணீர் முறையாக கிடைக்கும் பட்சத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் விவசாயம் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் என நம்புகிறோம்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரியை பொறுத்த வரையில் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். கடந்த 2 ஆண்டாக காரைக்காலில் விவசாயம் பொய்த்த காரணத்தால், நிவாரணம் கொடுக்கும் நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு பயிர் காப்பீடு திட்டம், விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் என 3 விதமான சலுகைகளை வழங்கினோம்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாததைப்போல் புதுச்சேரி, காரைக்கால் விவசாயிகளுக்கு மறுபடியும் விவசாயம் செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம். தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது மிக, மிக அவசியம்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றால் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே நிறைவேற்ற முடியும்.
மழைவரும் காலங்களில், மழையில்லா காலங்களில் எந்தெந்த அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள அம்சத்தை காவிரி மேலாண்மை வாரியம்தான் அமல்படுத்த வேண்டும். எனவே இனியும் கர்நாடத்தை நம்பி இருக்காமல் இருக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆரோவில் சர்வதேச நகரத்தின் 50-வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 24-ந் தேதி வருவது உறுதியாகியுள்ளது. அப்போது, புதுவை துறைமுகத்தின் சரக்கு போக்குவரத்தை தொடங்கி வைக்க கோரிக்கை வைத்துள்ளோம். இது சம்பந்தமாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. அவரது சுற்றுப்பயண விவரமும் அதிகாரபூர்வமாக தெரியவில்லை.
முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகள் முடிவடையாமல் உள்ளது. அந்த பணிகள் முடிவடைந்த உடன் வெள்ளோட்டம் நடைபெறும். புதுவைக்கு வரும் பிரதமர் மோடியை நானும், அமைச்சர்களும் சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தால் அவரை சந்தித்து புதுவைக்கு கிடைக்க வேண்டிய ரூ.6,675 கோடியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story