சிலிண்டர் வெடித்து வீடு சேதம்


சிலிண்டர் வெடித்து வீடு சேதம்
x
தினத்தந்தி 16 Feb 2018 11:45 PM GMT (Updated: 16 Feb 2018 11:00 PM GMT)

அஞ்செட்டியில் சிலிண்டர் வெடித்ததில் ஓட்டு வீடு சேதம் அடைந்தது. இதில் வயதான தம்பதி உயிர் தப்பினார்கள்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டி மராட்டி தெருவை சேர்ந்தவர் தசரத்ராவ் (வயது 80). இவரது மனைவி லட்சுமிபாய் (62). இவர்களுக்கு ராமச்சந்திரன் (40), ஆனந்தராவ் (35) என்ற மகன்களும், மஞ்சுளா (40), பத்மாபாய் (34) என்ற மகள்களும் உள்ளனர். அவர்கள் கர்நாடகாவில் வசித்து வருகிறார்கள். வயதான தம்பதியான தசரத்ராவ், அவரது மனைவி லட்சுமிபாய் ஆகியோர் அஞ்செட்டியில் தனியாக வசித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் சமையல் செய்த போது திடீரென கியாஸ் தீர்ந்து விட்டது. இதனால் கணவன்-மனைவி 2 பேரும் காலியான சிலிண்டரை கழற்றி விட்டு வேறு சிலிண்டரை பொருத்த முயன்றனர். அப்போது திடீரென சிலிண்டரில் தீப்பிடித்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வயதான தம்பதி 2 பேரும் வீட்டை விட்டு வெளியே ஓடினார்கள்.

அப்போது சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஓட்டு வீடு சேதமடைந்தது. மேலும் வீடு எரிந்து நாசம் ஆனது. இதுகுறித்து அஞ்செட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் சேதமதிப்பு குறித்து போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். சிலிண்டரில் தீப்பிடித்தவுடன் வயதான தம்பதி வீட்டை விட்டு வெளியேறியதால் உயிர் தப்பினர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story