பசிப்பிணி போக்கும் பணி!
எல்லோரும் அவரவர் பசியை உணர்வோம். ஆனால் அடுத்தவரின் பசியை உணர்பவர்கள் வெகு சிலரே. அந்த வெகு சிலரில், அர்ஜூன் சாவ்னியும், ஜெஸ்சி ஜிண்டாலும் அடக்கம்.
டீனேஜ் இளைஞர், இளம்பெண்ணான இவர்கள், டெல்லி அருகே உள்ள குருகிராமைச் சேர்ந்தவர்கள்.
ஒருபுறம் ஓட்டல்கள் போன்றவற்றில் அன்றாடம் பெருமளவு உணவு வீணாகும் நிலையில், மறுபுறம் உணவுக்கு வழியின்றி அதிகமானோர் வாடுவதை இவர்கள் கண்டனர்.
உடனே அதுகுறித்துச் சிந்தித்து ஒரு திட்டத்தை வடிவமைத்த இவர்கள், பெரிய உணவகங்கள், உணவு வலைத்தளங்களில் இருந்து உணவுகளைப் பெற்று, குடிசைப் பகுதிகள், ஆதரவற்றோர் இல்லங்கள், சில பள்ளிகளுக்கு கூட விநியோகிக்கத் தொடங்கினர். அப்போது இவர்கள் 12-ம் வகுப்பு மாணவர்கள்தான்.
டெல்லி, குருகிராம் என்று தொடங்கிய அர்ஜுன்- ஜெஸ்சியின் இந்தப் பணி, சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா என்று வேறு பல பெருநகரப் பகுதிகளுக்கும் தற்போது விரிவடைந்திருக்கிறது.
இப்போது இவர்களுடன், 26 உணவகங்களும், 8 தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினரும் இணைந்திருக் கிறார்கள்.
தினமும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு பார்சல் களை சுமார் நூறு தன்னார்வலர்கள் தேவையானவர் களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கின்றனர். பெருநிறுவனங்கள் தங்களின் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் உணவு உதவியை அளிக்கின்றன.
அறக்கட்டளை ஒன்றுடன் இணைந்து சுமார் 200 குழந்தைகளுக்கு மதிய உணவையும் அர்ஜுன்- ஜெஸ்சி அணி வழங்குகிறது.
மேலும் அதிகமான பேருக்கு உணவு வழங்க வேண்டும் என்று இவர்கள் யோசித்தபோது, சொந்தக்காலில் நிற்கும் திட்டத்தின் மூலம்தான் அது சாத்தியமாகும் என்று தெரிய வந்தது. ஆக, ஒவ்வோர் உணவுக்கும் ஒரு குறைந்தபட்சக் கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டது. எவருக்கும் சிரமம் தராத தொகை அது.
தேவையானவர்களுக்கு சூடான, சுவையான உணவுகளை வழங்குவதை தங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கும் அர்ஜுனும் ஜெஸ்சியும், “சுவையான, சுகாதாரமான உணவு பெற எல்லோருக்கும் உரிமை இருக்கிறது” என்று அழுத்தமாகக் கூறுகின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் பசியால் 25 லட்சம் பேர் மடிகின்றனர் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
இந்தப் பின்னணியில், பசிப்பிணி போக்கும் இந்த இளைஞர்களின் பணி பெரிது!

Related Tags :
Next Story