முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 25-ந்தேதி கோவில்பட்டி வருகை: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 25-ந்தேதி கோவில்பட்டி வருகை: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
x
தினத்தந்தி 18 Feb 2018 2:15 AM IST (Updated: 18 Feb 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 25-ந்தேதி கோவில்பட்டி வருவது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் வெங்கடேஷ் ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடி,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 25-ந்தேதி கோவில்பட்டி வருவது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் வெங்கடேஷ் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டம்

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 25-ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஏ.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்து கொண்டு, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார். அவர் வருகை குறித்தும், அவர் கலந்து கொள்ளும் விழாவில் ஒவ்வொரு துறைகளின் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்தும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வெங்கடேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் வெங்கடேஷ் பேசியதாவது:-

நலத்திட்ட உதவி விவரங்கள்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 25-ந்தேதி கோவில்பட்டியில் நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்து கொள்கிறார். முடிவுற்ற பணிகளை தொடக்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒவ்வொரு துறைகளின் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் விவரங்கள், முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள் மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட முவிவரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பாக ஒவ்வொரு துறையின் மூலம் தேர்வு செய்யும் பயனாளிகளை, விழா நடைபெறும் இடத்துக்கு முன்னதாக அழைத்து சென்று அவர்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். விழாவை சிறப்பாக நடத்திட, ஒவ்வொரு துறை அலுவலர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகாரிகள்

இந்த ஆலோசனை கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், உதவி கலெக்டர் பிரசாந்த், வேளாண்மை இணை இயக்குனர் செல்வராஜ், மகளிர் திட்ட இயக்குனர் ரேவதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் லலிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் தியாகராஜன், முத்து எழில், கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் அச்சையா, உதவி இயக்குனர்கள் ஜார்ஜ் மைக்கேல் அந்தோணி (ஊராட்சிகள்), மாகின் அபுபக்கர் (நகர பஞ்சாயத்துகள்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story