விழுப்புரத்தில் ஆன்-லைன் பத்திரப்பதிவை துரிதப்படுத்த சார்பதிவாளர்களுக்கு பயிற்சி
ஆன்-லைன் பத்திரப்பதிவு திட்டத்தை துரிதப்படுத்துவது குறித்து சார் பதிவாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
விழுப்புரம்,
தமிழகம் முழுவதும் ஆன்-லைன் பத்திரப்பதிவு திட்டம் கடந்த 13-ந் தேதி முதல் அமலுக்கு வந்து பத்திரங்கள் பதிவு நடைபெற்று வருகிறது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் ஆன்- லைன் பத்திரப்பதிவு திட்டம் துரிதமாக நடந்து வருகிறது.
கடந்த 4 நாட்களில் மட்டும் கடலூர் மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 1,349 பத்திரங்கள் ஆன்-லைன் திட்டத்தில் பதிவு செய்து வழங்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த பணியை மேலும் துரிதப்படுத்தும் வகையில், அதற்கான பயிற்சி வகுப்பு நேற்று விழுப்புரம் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சியை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர் (நிர்வாகம்) குமரேசன் தொடங்கி வைத்து ஆன்-லைன் பத்திரப்பதிவை இன்னும் துரிதப்படுத்துவது குறித்து சார்பதிவாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், கணினி இயக்குபவர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
இந்த பயிற்சியில் இணை சார்பதிவாளர்கள் தசாராம், ஜெயக்குமார், சார்பதிவாளர்கள் உதயசூரியன், திருமாறன், சத்தியப்பிரியா, இந்திரா, சீனுவாசன், ராஜவேல், குமார், சிவசங்கரி, சந்திரகுமார், கல்யாணகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story