குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீரை திருடுபவர்கள் மீது நடவடிக்கை பொதுமக்கள் கோரிக்கை


குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீரை திருடுபவர்கள் மீது நடவடிக்கை பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 18 Feb 2018 3:00 AM IST (Updated: 18 Feb 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

குடிநீருக்காக திறக்கப்படும் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதண்ணீரை திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கனர்.

கம்பம்,  

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை முல்லைப்பெரியாறு தண்ணீரை நம்பி 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடியும், 5 ஆயிரத்து 190 ஏக்கர் பரப்பில் ஒரு போக நெல் சாகுபடியும் செய்யப்பட்டு வருகிறது. கம்பம் பகுதிகளில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள வீரப்பநாயக்கன்குளம், ஒடப்படிகுளம், ஒட்டுக்குளம் உள்ளிட்ட குளங்களில் முல்லைப்பெரியாறில் இருந்து வரும் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த குளங்களில் மீன் வளர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் ஏலம் விடுகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டது. இதனால் விவசாயமும் கேள்விக்குறியானது. மேலும் மீன் வளர்ப்பதற்கும் ஏலம் விடப்படவில்லை.

இந்நிலையில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவத்தில் முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதையொட்டி குளங்களில் தண்ணீர் தேக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் குளத்தில் மீன் வளர்ப்பதற்கு ஏலம் விட்டுள்ளனர்.

இதில் ஏலம் எடுத்தவர்கள் மீன் குஞ்சுகளை குளத்தில் விட்டு வளர்த்து வருகின்றனர். மேலும் கடந்த மூன்று மாதங் களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் குளம் தண்ணீரின்றி காணப்படும் நிலை ஏற்பட்டது. எனவே மீன்குஞ்சுகளை காப்பாற்றுவதற்கு நள்ளிரவு நேரங்களில் சின்னவாய்க்கால் வழியாக தண்ணீரை திறந்து குளத்தில் தேக்கி வருகிறார்கள். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் செய்தனர். இதையடுத்து குளத்துக்கு செல்லும் தண்ணீரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, குளத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அது மதகு வழியாக கசிந்து சென்ற தண்ணீர் என்றனர். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் இன்னும் ஓரிரு மாதங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படும். எனவே குடிநீருக்காக திறந்து விடப்படும் தண்ணீரை திருட்டுத்தனமாக எடுப்பவர்கள் மீது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story