விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 17 Feb 2018 10:15 PM GMT (Updated: 17 Feb 2018 7:16 PM GMT)

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள சாத்தமங்கலம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25). இவர் தினமும் மது குடித்து வந்தார். மேலும் தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள சாத்தமங்கலம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25). இவர் தினமும் மது குடித்து வந்தார். மேலும் தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதற்கு அவர்கள் குடிபழக்கத்தை முதலில் நிறுத்து பிறகு திருமணம் பற்றி பேசலாம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கார்த்திக் நேற்று முன்தினம் வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதைபார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story